Politics
”நாடாளுமன்றத்தில் நான் பேசினால் என் கணவருக்கு நோட்டீஸ் வருகிறது” : சுப்ரியா சுலே MP குற்றச்சாட்டு!
ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாளும் அவர்களை அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளை கொண்டு மிரட்டி வருகிறது பா.ஜ.க. மேலும் எதிர்க்கட்சி மாநிலங்களின் ஆட்சியை கவிழ்க்கும் சதி வேலைகளையும் பா.ஜ.க செய்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அரசை விமர்சித்து நான் பேசும்போதெல்லாம் தனது கணவருக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வருவதாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரியா சுலே," நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது உரையின் போது பல பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி பேசினேன். வ்வாறு பேசியதைத் தொடர்ந்து தனது கணவருக்கு, வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது ஒரு முறையல்ல. தான் நாடாளுமன்றத்தில் பேசும் போதெல்லாம் இது தொடர்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !