Politics
"விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்"- கலாநிதி வீராசாமி MP கோரிக்கை !
இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருந்தாலும் ஒன்றிய அரசு தொடர்ந்து பிராந்திய மொழிகளை புறக்கணித்து ஒரு சாரார் பேசும் ஹிந்திக்கு மட்டுமே முக்கியத்தும் அளித்து வருகிறது. அரசின் பல்வேறு நிறுவனங்களும் இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் சிலவும் அதே வேளையில் ஈடுபட்டு வருகிறது.
அதிலும் ஏராளமான விமான நிறுவனங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் கூட ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகின்றன. இதற்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் விமான நிறுவனங்கள் அதனை மாற்றிக்கொள்ளாத நிலையே உள்ளது.
இந்த நிலையில், இந்திய விமானங்கள் தமிழில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று கலாநிதி வீராசாமி எம்.பி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். விமான கட்டணங்களை ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், "சர்வதேச விமானங்கள் கூட தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களுக்கு சேவை ஆற்றும் போது அந்தந்த மாநில மொழிகளில் அறிவிப்புகளை வெளியிடுகின்றன. ஆனால் இந்திய விமான நிறுவனங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகின்றன. இந்திய விமானங்களும் மாநில மொழிகளை அறிவிப்புகளை வெளியிட விமான போக்குவரத்து துறை உத்தரவிட வேண்டும் வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மேலும், விமான கட்டணங்களின் உயர்வால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். சாதாரண மக்கள் ஆன்லைனில் விமானங்களை புக் செய்வதால் விமானங்கள் ரத்தாகும் போது அந்த கட்டணம் ஆன்லைன் மூலமாகத்தான் அனுப்பப்படும் என்று விமான நிறுவனங்கள் கூறுகின்றன. இதனால் அடுத்த விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிக்க முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்"என்று கூறினார்.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!