Politics
"முதலமைச்சரின் மக்கள் நல திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது" - துரை வைகோ புகழாரம் !
முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு சென்று அடைந்ததால் இன்று தமிழ்நாடு, புதுவை உட்பட 40 தொகுதிகளில் இமாலய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் பெற்று தந்துள்ளனர் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்...."
திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் துரை வைகோவிற்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைவைகோ, "ஒரு இமாலய வெற்றியை பெற்று தந்த மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த வெற்றியால, தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தலைவர் வைகோவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு சென்று அடைந்ததால் இன்று தமிழ்நாடு, புதுவை உட்பட 40 தொகுதிகளில் இமாலய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் பெற்று தந்துள்ளனர்.என் வெற்றிக்கு பாடுபட்ட அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் ரகுபதி , அமைச்சர் மெய்யநாதன் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்த வெற்றி.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் எளியவன் துரை வைக்கோ பாடுபடுவேன். , நீண்ட காலமாக நிறைவேற்றாத மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவேன். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை"என்று கூறியுள்ளார்.
Also Read
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!