Politics
மோடியும், யோகியும் : சர்வாதிகாரத்திற்கு வித்திடும் இரு பெரும் சர்வாதிகாரிகள்!
உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் யோகி ஆதித்யநாத், ஒன்றியத்தில் பிரதமராக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மோடியுடன் அவ்வப்போது ஒப்பிடப்பட்டு வருவது வழக்கம்.
காரணம், வளர்ச்சி, சம உரிமை, சமத்துவம், சமூக நீதி என நாட்டின் ஆக்கப்பூர்வ செயல்கள் எவை பற்றியும் கவலைகொள்ளாமல், இந்துத்துவ கொள்கைகளை முன்னிறுத்தி, இஸ்லாமிய எதிர்ப்பை விளைப்பதே மோடி மற்றும் யோகியின் தாரக மந்திரமாக அமைந்துள்ளது.
மோடியும் சரி, யோகி ஆதித்யநாத்-ம் சரி, ஆர்.எஸ்.எஸ்-ல் தங்களது இளமை காலங்களை கழித்தவர்கள். ஆனால், மோடி காவி போடாத இந்துத்துவவாதி. யோகி காவி போட்ட இந்துத்துவவாதி.
சொல்லப்போனால், மோடியை விட பல விதத்தில், யோகி ஆபத்தானவர். அதற்கு, உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கொடூரங்களே உதாரணமாகவும் இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் சாமியாராக இருக்கும் யோகி ஆதித்யாநாத், எவ்வாறு நடுநிலைத்தன்மையுடன் இருக்க இயலும், அனைத்து மத முறைகளையும் எவ்வாறு சமரசமாக கையாள முடியும் என்ற கேள்விகள் எழ,
அதற்கான சரியான விடையை இரு நாட்களுக்கு முன்பு அவரே தனது பிரச்சார பேச்சில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, “பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டது போல, மோடி ஆட்சி மீண்டும் வந்தால், மதுரா மசூதி இடிக்கப்பட்டு கிருஷ்ணர் கோவில் கட்டி எழுப்பப்படும் என அவரே சர்வாதிகார, அதிகாரத்துவ கருத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் என்கிற நிலையிலும், ஒரு குறிப்பிட்ட மத ஆலையை இடித்து தான், மற்றொரு மத ஆலையை நிறுவ வேண்டும் என்கிற எண்ணம், அச்சமூட்டுவதாய் அமைந்துள்ளது என பலரும் விமர்சிக்க;
இது போன்ற ஆட்சியைக் கண்டு தான், தற்போது உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, “யோகி ஆதித்யநாத்-ஐ பார்த்து, மற்ற முதல்வர்கள் எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என கற்றுக்கொள்ள வேண்டும்” என்ற சர்ச்சைக் கருத்தை பதிவு செய்துள்ளார்.
இது போன்ற ஆட்சி தான் நிறுவப்பட வேண்டும் என்றால், மோடி கூறியது போல, பொது வாழ்வில் இருக்கவே இவர்கள் (மோடி, யோகி) தகுதியற்றவர்களாக தானே எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் இதன் வழி வலுக்கத்தொடங்கியுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!