Politics
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்பர்பூர் பெயர் மாற்றப்படும் : யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தால் அதிர்ச்சி!
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
பாஜகவால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்று சொல்ல ஏதும் இல்லாத நிலையில், தொடர்ந்து இந்து - இஸ்லாம் வெறுப்புணர்வை தூண்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இஸ்லாமிய பெயரில் அமைந்துள்ளார் நகரங்களின் பெயர்களை பாஜக அரசு மாற்றி வருகிறது.
அந்த வகையில் தற்போது உத்தரபிரதேசத்தில் அக்பர்பூர் என்ற நகரின் பெயரை மாற்றுவோம் என பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், "அக்பர்பூர் பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து உறுதிமொழிகளுக்கு இணங்க உ.பி.யின் அக்பர்பூரின் பெயர் மாற்றம் செய்யப்படும்.
காலனித்துவத்தின் அனைத்து தடையங்களும் இந்தியாவிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பம். அந்த வகையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மோடி ஆட்சிக்கு வரும் நிலையில் இந்த உறுதி மொழி நிறைவேற்றப்பட்டு நமது பாரம்பரியம் காக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!