Politics
"பாஜகவை புறக்கணிக்க வேண்டும்" - உ.பி-யில் நடைபெற்ற மகா பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றுவரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் குஜராத் ராஜ்கோட் தொகுதிக்கு ஒன்றிய அமைச்சரான பர்ஷோத்தம் ரூபாலாவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, ராஜ்புத் சமூகத்தினரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரது பேச்சுக்கு குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ராஜ்புத் சமூகத்தினர் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மன்னிப்பு கோரினார்.
எனினும் ரூபாலாவை மாற்ற வேண்டும் என பாஜகவை வலியுறுத்தி ராஜ்புத் சமூகத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும் பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அந்த சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சத்திரிய சமூக பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மகா பஞ்சாயத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை'எதிர்ப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த மகா பஞ்சாயத்தில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!