Politics
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுக்க சிறை நிர்வாகம் மறுப்பு - டெல்லி அமைச்சர் குற்றச்சாட்டு !
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனிடையே அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர். தேர்தல் நடைபெற சில நாட்களே இருக்கும் நிலையில், மாநில முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது ஜாமீனுக்காக சர்க்கரை அளவை உயர்த்த சிறையில் இனிப்பு உணவுகளை அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துக் கொள்கிறார் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியிருந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் சிறையில் உள்ள கெஜ்ரிவால் சர்க்கரை இல்லாத இனிப்புகளை 3 முறை மட்டுமே சாப்பிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுக்க சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாக ஆம் ஆத்மீ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்துப் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, "சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது, சர்க்கரையின் அளவு 300-ஐ தாண்டியிருக்கிறது. உலகில் எந்த மருத்துவரிடம் கேட்டாலும், இன்சுலின் இல்லாமல் 300-க்கு மேல் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்வார்கள்.ஆனால், சிறை நிர்வாகம் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மறுத்துவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!