Politics
முடிவுக்கு வரும் பா.ஜ.க-வின் வெற்றி பிம்பம்: வாக்கு வித்தியாசங்கள் சொல்லும் உண்மை!
குஜராத், உத்தரப் பிரதேசம் என பா.ஜ.க வாக்கு வங்கி அதிகம் பெற்றுள்ள மாநிலங்களிலும், வாக்குகளை இழக்கும் வகையில் பின்னடைவை சந்தித்து வருகிறது மோடி அரசு.
வேட்பாளர்கள் தேர்வில் நடந்த சிக்கல், குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியது என பல்வேறு காரணங்களின் அடிப்படையில், வரலாறு காணாத சரிவை சந்தித்து வரும் பா.ஜ.க, கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியும், ஒப்புக்கு பெற்ற வெற்றியே என்ற நிலை வாக்கு வங்கி குறித்த தரவின் வழி வெளிப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலேயே, நூலிழையில், பல இடங்களில் பா.ஜ.க வெற்றியடைந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
அதாவது, பா.ஜ.க வெற்றியடைந்த, 303 தொகுதிகளில் சுமார், 100 இடங்களில், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றுள்ளது.
குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தின் மச்லி ஸஹர் தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் சரோஜ் வெறும் 181 தொகுதி வித்தியாசத்தில் மட்டுமே வெற்றியடைந்துள்ளார்.
பா.ஜ.க மூத்த தலைவர் அர்ஜுன் முண்டா கூட, 1,445 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தான் ஒன்றிய வேளாண் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இவ்வாறு கடந்த தேர்தலில், நூலிழையில் வென்ற நூறு தொகுதிகளில் பாதிக்கு பாதி வெற்றியடைந்திடாமல் இருப்பினும், பா.ஜ.க.வால் பெரும்பான்மை நிரூபிக்க இயலாமல், ஆட்சி நழுவி சென்றிருக்கும்.
இப்படி பெற்ற வெற்றியை கொண்டு தான்
“மிருகபலம் பொருந்திய கட்சியாக எங்கள் கட்சி இருக்கிறது, கடந்த முறை பெற்ற வரலாற்று வெற்றியை விட இந்த முறை கூடுதல் இடங்களை வெல்வோம்” என ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வெற்று சவடால் பேசி இருக்கிறார் மோடி.
ஆனால், உண்மையில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், எதிர்ப்பை தான் அதிகமாக சந்தித்து வருகிறது பா.ஜ.க.
இப்படியான சூழலில், பா.ஜ.க எவ்வாறு 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கேள்வி இந்தியா முழுவதும் வலுக்க தொடங்கியுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!