Politics

புல்வாமா தாக்குதல் நடந்த ஒரே வாரம் : பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்ற பாஜக... பின்னணி என்ன ?

2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து யாராலும் மறக்க முடியாது. தீவிரவாதி ஒருவன் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 44 சி.ஆர்.பி.எஃப் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிரவைத்தது.

இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து அப்போதே ஒன்றிய அரசுக்குப் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் ஒன்றிய அரசு அனைத்து கேள்விகளையும் மவுனமாகவே கடந்து விட்டது.

மேலும், அந்த ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதில் இந்த தாக்குதலுக்கு பெரும் பங்கு இருந்ததாக கூறப்பட்டது.இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் நடந்த பின்னர் பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதல் நடந்த சில வாரங்களில் பாகிஸ்தானில் உள்ள கராச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் HUB Power company என்ற நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியுள்ளது. மொத்தம் 14 தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் வழங்கப்பட்ட நிலையில், 5 பத்திரங்கள் மூலம் தலா ரூ.1 லட்சமும், மீதமுள்ள 9 தேர்தல் பத்திரங்கள் மூலம் தலா ரூ.10 லட்சமும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட தினத்தில் அதே தொகையில் பாஜகவும் நன்கொடை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்திடம் இருந்து பாஜகவே நன்கொடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

Also Read: தேர்தல் பத்திரங்களின் தனிப்பட்ட ஆல்பா எண்ணை வெளியிடாதது ஏன் ? - SBI மீது நீதிபதி சந்திரசூட் அதிருப்தி !