Politics

குளிக்க தகுதியற்றதாக அறிவிக்கப்பட்ட கங்கை... மோடி ஒதுக்கிய ரூ.20,000 கோடி எங்கே ? நெட்டின்சன்கள் கேள்வி !

இந்தியாவின் மிகபெரிய நதிகளில் ஒன்றான கங்கை நதி இமயமலையில் தோன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாய்ந்து இறுதியாக வங்கதேசத்தில் கடலில் கலக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா பகுதியாகவும் கங்கை டெல்டா திகழ்கிறது.

அதே நேரம் இந்தியாவில் இந்து மதத்தின் புனித நதியாகவும் கங்கை திகழ்ந்து வருகிறது. இதனால் கங்கை நதியில் நீராடுவது புண்ணிய செயலாக கருதப்படுவதால் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் கங்கையில் நீராக பக்தர்கள் குவிவதும் வாடிக்கையாகியுள்ளது.

இந்த நிலையில், அத்தகைய கங்கை நதியில் குளிக்க வேண்டாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கங்கை நதியின் கரையில் உள்ள பல்வேறு நகரங்களின் கழிவுகள் கங்கை நதியில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் கங்கை நதி தொடர்ந்து மாசுபட்டு வருகிறது.

இதன் காரணமாக கடந்த 1986 ஆம் ஆண்டு கங்கை நதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அப்போதே பல ஆயிரம் கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்த கடந்த 2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு ஒன்றியத்தில் பதவியேற்ற நிலையில், கங்கை நதியை தூய்மை படுத்துவோம் என அறிவித்தார்.

பின்னர் இதற்காக 'நவாமி கங்கா' என்ற திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு கங்கை நதியை சுத்தப்படுத்த ரூ.20,000 கோடியை பிரதமர் மோடி ஒதுக்கினார். ஆனால், தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கங்கை நதியின் முழுப் பகுதியும் குளிப்பதற்குத் தகுதியற்றதாக இருப்பதாகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. மேலும், மலக் கோலிஃபார்ம் என்ற பாக்டீரியாவின் அளவு அதிகமாக இருப்பதால், அங்கு யாரும் குளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கங்கையை தூய்மை படுத்த மோடி ஒதுக்கிய தொகை என்ன ஆனது என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: “இந்திய ஒன்றிய ஆட்சி மாற்றமே இனிய பிறந்தநாள் பரிசாகும்” - உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!