Politics
உ.பி-யில் இறுதி செய்யப்பட்ட இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு - 17 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்!
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்றத்திலும் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவை ஓரணியில் நின்று எதிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில், அந்த மாநில சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணியை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேர்ந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 80 மக்களவை தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 63 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் போட்டியிடும் என்றும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ரவிதாஸ் மகோத்ரா கூறியுள்ளார்.
Also Read
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!