Politics
நீதி யாத்திரைக்கு தடை.. ராகுல் காந்தியை கண்டு அஞ்சும் பாஜக அரசு : தடுப்புகளை தகர்ந்த காங். தொண்டர்கள் !
கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பயணம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரையான பாரத் ஜோடோ நீதி யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.
இந்த யாத்திரை நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 நாட்களில் 110 மாவட்டங்களில் சுமார் 6700 கி. மீ பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைப்பயணம் நடைபெறவுள்ளது. மணிப்பூர், நாகாலாந்தில் யாத்திரை முடிந்ததை அடுத்துக் கடந்த ஜன.18ம் தேதி ராகுல் காந்தியின் யாத்திரை அசாமிற்கு வந்தது.
அங்கு ராகுல் காந்தியின் யாத்திரையின் போது அங்கு வந்து பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக கோஷமெழுப்பினர். ஆனால், அவர்களை கண்டதும் ராகுல் காந்தி பேருந்தில் இருந்து இறங்கி அவர்களிடம் அன்பை வெளிப்படுத்தினார்.
பின்னர் அசாமில் காலை ராகுல் காந்தி ஶ்ரீ சங்கர தேவ் கோயிலுக்கு சென்றார். ஆனால், கோவிலின் முன்பு நின்ற பொலிஸார் கோவிலுக்குள் விடாமல் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், அசாம் தலைநகர் கவுகாத்திகுள் செல்ல விடாமல் ராகுல் காந்தியை பாஜக அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் யாத்திரை கவுகாத்தி வழியாக செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், யாத்திரை நகருக்குள் வர முதல்வர் ஹிமந்த சர்மா தடை விதித்து அந்த பகுதியில் ஏராளமான போலீசாரை குவித்தார். மேலும் ராகுல் காந்தியை நகரத்திற்குள் வராமல் இருக்க போலீஸார் மிகப்பெரிய அளவில் தடுப்புகள் அமைத்திருந்தனர்.
ஆனால், தடுப்புகளை அகற்றிவிட்டு நகருக்குள் செல்ல காங்கிரஸ் தொண்டர்கள் முயன்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த வழித்தடத்தில்தான் பஜ்ரங் தளம், பா.ஜ.க.வின் யாத்திரை சென்றது. ஆனால் எங்களுக்கு தடுப்பை அமைத்து இருக்கின்றனர். நாங்கள் தடுப்புகளை எடுப்போம். ஆனால் சட்டத்தை கையில் எடுக்கமாட்டோம். எங்களை பலவீனமானவர்கள் என்று எண்ணிவிடவேண்டாம்.
பாஜக-ஆர்எஸ்எஸ்க்கு காங்கிரஸ் தொண்டர்கள் பயப்படமாட்டார்கள். அவர்களை நாங்கள் தோற்கடிப்போம். அசாம் முதல்வர் எங்கள் யாத்திரைக்கு எதிராக என்ன செய்தாலும் அது யாத்திரைக்கு பயனளிக்கும். முதல்வர் ஹிமந்தா சர்மா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நடவடிக்கையால் எங்களது யாத்திரைக்கு போதுமான விளம்பரம் கிடைத்துள்ளது" என்று கூறினார்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!