Politics
மகாராஷ்டிரா :அழைப்பிதழில் புகைப்படம் இல்லாததால் ஆத்திரம்: காவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக MLA!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தனி அணியாக செய்யப்பட்டு பாஜகவோடு இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிறந்து சென்ற அஜித் பவார் சேர்த்து துணை முதல்வரானார்.
இந்த நிலையில், அங்குள்ள புனேவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்பாட்டில் சசூன் மருத்துவமனையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு துணை முதல்வர் அஜித் பவார், கல்வித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரீப், தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுனில் தட்காரே, புனே கண்டோண்ட்மெண்ட் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளே ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்காக அழைப்பிதழில் பாஜக எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் பெயர் அச்சிடப்படாமல் இருந்தது. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. எனினும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
ஆனால், நிகழ்ச்சியின் மேடையில் பங்கேற்பாளர்கள் புகைப்படம் இடம்பெற்ற நிலையில், அதிலும் பாஜக எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால் நிகழ்ச்சியில் இடையே மேடையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ பாதியிலே வெளியேறினார்.
தொடர்ந்து, மேடையில் இருந்து அவர் வெளியேசெல்லும்போது எம்.எல்.ஏவில் கால் தடுக்கிய நிலையில், ஆத்திரமடைந்த பாஜக எம்.எல்.ஏ அங்கு நின்றுகொண்டிருந்த காவல் அதிகாரியின் கன்னத்தில் அடித்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!