Politics
பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி : தெலங்கானாவில் கரைந்து வரும் பாஜக !
இந்தியாவில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் விஜயசாந்தி. 1980-ல் கல்லுக்குள் ஈரம் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு தொடர்ச்சியாக தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானார்.
1992-ல் ரஜினி நடிப்பில் வெளியான 'மன்னன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்த விஜயசாந்தி, தொடர்ச்யாக படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.நடிப்பில் இருந்து அரசியலுக்கு செல்ல விரும்பிய இவர், 1998-ம் ஆண்டு தெலங்கானா பாஜகவில் இணைந்தார்.
2005 வரை அக்கட்சியில் இருந்த அவர், பின்னர் அதில் இருந்து விலகி 2009-ல் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்தார். அந்த கட்சியிலிலும் 2014 வரை இருந்த இவர், 2014-ல் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், 2020-ல் விலகி மீண்டும் பாஜகவிலேயே இணைந்தார். ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் அரசியல் என இரண்டையும் விடாமல் தொடர்ந்து வந்த இவர், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்தபோது எம்.பி-யாகவும் பதவி வகித்தார்.
பின்னர் அவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலங்கனா முன்னாள் எம்.பி.க்கள் கோமதிரெட்டி, ராஜகோபால் ரெட்டி, ஜி.விவேகானந்த், எனுகு ரவீந்தர் ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து விலகினர். இதில் ராஜகோபால் ரெட்டியும் விவேகானந்தரும் காங்கிரசில் இணைந்தனர்.
அந்த வகையில், மீண்டும் விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் காங்கிரஸில் அவர் இணைந்தார். விஜயசாந்தி காங்கிரஸுக்கு சென்றிருப்பது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இதன் மூலம் அதிக வாக்குகள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்ததும் அவ் அவருக்கு தெலங்கானா தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Also Read
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் MK ஸ்டாலின் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
- 
	    
	      பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!