Politics
"வெறும் 2 % ஓட்டை வைத்து முதல்வரை உருவாக்க முடியாது" - பாஜகவை கிண்டல் செய்த ராகுல் காந்தி !
ஆந்திர மாநிலத்தில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அந்த மாநிலம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சந்திர சேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.
அங்கு இந்த வருடத்தோடு சட்டமன்றத்தின் ஆயுள் காலம் முடிவடையவுள்ள நிலையில், 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவுக்கு, நவம்பா் 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சி இடையே நேரடி மோதல் நிலவுகிறது.
இதன் காரணமாக அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்ச நிலையை அடைந்துள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வெளியான பல்வேறு கருத்துகணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதே நேரம் பாஜக இங்கு சொற்ப வாக்குகள் மட்டுமே பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி அமெரிக்கா சென்று அங்கு ஓபிசி வகுப்பை சேர்ந்தவரை அதிபராக்குவேன் என்று கூட கூறுவார் என்று கிண்டல் செய்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சியினர் மீது அமலாக்கத்துறை, கைது நடவடிக்கைகள் நடக்கிறது. என் மீது கூட 24 வழக்குகள் இருக்கின்றன. என்னுடைய எம்.பி பதவி பறிப்பு, அரசு வீடு பறிப்பு கூட பாஜகவால்தான் நடந்தது.
தெலங்கானாவில் பாஜகவுக்கு 2% வாக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால், அவர்கள் இங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரை பிரதமராக்குகிறோம் இரு சொல்கிறார்கள். அதிலும் பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று அங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களை அதிபராக்குவேன் என்று கூட சொல்வார்" என்று விமர்சித்துள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!