Politics
காங்கிரஸ் கோட்டையாகும் ம.பி : படுதோல்வியை சந்திக்கும் பாஜக.. வெளியான சமீபத்திய கருத்து கணிப்பு !
மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியை பிடித்தது !
ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.
அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், Times Now மற்றும் Navbharat Samachar ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து குஜராத் டெல்லி, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளை சரியாக கணித்த ஸ்மால் பாக்ஸ் இந்தியா நிறுவனம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறியிருந்தது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் நாட்கள் ஆக, ஆக காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வந்ததாக கூறப்பட்டிருந்தது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெரும் என்றும், பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்றும் Poll Tracker அமைப்பு வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அந்த நிறுவனம் சார்பில் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 157 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளிவந்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 100 முதல் 117 இடங்களில் வெற்றபெறும் என்றும், பாஜக 38 முதல் 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 முதல் 3 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதர தொகுதிகளின் முடிவுகள் விரைவில் வெளியாகும் என அந்த நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
- 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!