Politics
அனுமதி மறுத்த பாஜக அரசு: சுவர் ஏறிக் குதித்த உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்.. நடந்தது என்ன ?
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது முக்கியமான தலைவராகவும் , சுதந்திர இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆசானாகவும் விளங்கியர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். ஜெ.பி என அழைக்கப்பட்ட இவர் பல்வேறு சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர்.
சுதந்திர இந்தியாவில் பிரதமர் பதவியே தேடி வந்தபோதும் அதனை மறுத்து, ஒரு கட்டத்தில் பொதுவாழ்க்கையில் இருந்தே விலகினார். எனினும் இந்தியா காந்தியின் அவசர சட்டத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான முகமாக திகழ்ந்தார்.
இவரின் முயற்சி காரணமாக எதிர்க்கட்சிகள் ஒரே கொடையின் கீழ் வந்து முதல்முறையாக காங்கிரஸ் அரசை வீழ்த்தினர். தற்போது இந்திய அரசியலின் முகமாக திகழும், முலாயம் சிங், லல்லு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோரை உருவாக்கியவர் என்றால் அது ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான்.
அவரின் பிறந்த நாளான இன்று அவரின் சிலைக்கு அஞ்சலி செலுத்த உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்திற்கு சென்றார். ஆனால், அங்கு அவருக்கு உத்தரப்பிரதேச பாஜக அரசு அனுமதி மறுத்தது.
இதன் காரணமாக, கட்டிடத்தின் காம்பவுண்ட் சுவரில் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சியினர் ஏறிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், "சிறந்த சோசலிச சிந்தனையாளர் ஜெய்பிரகாஷ் நாராயணன் தொடங்கிய இயக்கத்தை மீண்டும் நினைவுகூர பாஜக பயப்படுகிறது என்பதே உண்மை. ஏனெனில் பாஜக ஆட்சியில் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவை அதைவிடப் பல மடங்கு அதிகம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?