Politics
“தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்குதான் வெற்றி..” : கருத்துக்கணிப்பை வெளியிட்ட TIMES NOW !
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகிறது. ஒன்றியத்தில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் உத்திகளை தொடங்கி விட்டன. இந்த முறை பாஜகவை தோற்கடிக்க நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு 'இந்தியா' கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டு இதுவரை 3 கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக அண்மையில் நடைபெற்ற 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4 இடத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் மக்கள் ஆதரவு இந்தியா கூட்டணிக்கு பெருகியுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கரங்கள் ஓங்கி இருக்கும் நிலையில், தற்போது மேலும் அதனை வலுப்படுத்தும் விதமாக TIMES NOW பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கே அதிகளவு வெற்றி கிடைப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
Also Read
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
மும்பையில் நடைபெறும் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025!’ : தமிழ்நாடு அரசு பங்கேற்பு! - முழு விவரம் உள்ளே!
-
குளத்தில் குதித்த காதலன் : காப்பாற்ற முயன்ற காதலி - நடந்தது என்ன?