Politics

நாட்டுக்கே அவமானமாய் திகழும் டெல்லி பாஜக எம்.பிக்கள்.. கௌதம் கம்பீர் முதல் ரமேஷ் பிதுரி வரை !

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி கூறிய கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை சேர்ந்த எம்.பி., ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, 'ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் பேசினார். மேலும் ஆபாச வார்த்தைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார்.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவர் முன்பும் அவரது மதத்தை குறிப்பிட்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியது அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி தெற்கு டெல்லியில் போட்டியிட்டு வென்ற நிலையில், டெல்லியின் இதர எம்.பிக்களும் இவரைப் போலவே மதவெறியோடு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த வகையில் தீக்கதிர் நாளிதழும் பாஜக எம்.பிக்களின் மோசமான செயலை அம்பலப்படுத்தியுள்ளது.

இது குறித்து தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தியில், டேனிஷ் அலியை இழிவுபடுத்திய ரமேஷ் பிதுரி உட்பட தில்லியைச் சேர்ந்த 7 பாஜக எம்.பி.,களும் கொடூரமான, குரூரமான நபர்களாகவே உள்ளனர்.

1. பர்வேஷ் வர்மா : தொடர் வெறுப்புப் பேச்சுக் குற்றவாளியான இவர் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். ஆனால் தற்போது வெறுப்பைப் பரப்பியதற்காக வழக்குகளை எதிர்கொள்கிறார். "

2. கவுதம் கம்பீர் : மோசடி வழக்கில் தொடர்புடையவர். கொரோனா மருந்தை பதுக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். சமீபத்தில் ஒரு சர்வதேச போட்டியின் போது ஆபாசமான சைகை செய்தார். அவரது தொகுதியில் அரிதாகவே காணப்படுவார். அடிக்கடி கிரிக்கெட் அல்லது டிவியில் சர்ச்சை கருத்து தெரிவிப்பதைக் காணலாம்.

3. மனோஜ் திவாரி : விதிகளை மீறி விமான போக்குவரத்து கட்டுப்பாடுப் பகுதிக்குள்நு(ATC) ழைந்ததற்காக வழக்குப்பதிவுக்கு உள்ளானவர். மேலும் பல முட்டாள்தனமான அறிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்.

4. ஹர்ஷ் வர்தன் : கொரோனா சமயத்தில் சுகாதார அமைச்சராக தோல்வி யுற்றார். ஒன்றிய அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அறிவியலற்ற மருத்துவத்தை ஊக்குவித்ததற்காக இந்திய மருத்துவ சங்கத்தால் (ஐஎம்ஏ) கடுமையாக கண்டிக்கப்பட்டவர்.

5. ஹன்ஸ் ராஜ் : ஏமாற்றுதல், போலி வழக்குகளில் தொடர்புடையவர்.பொய்யான பிரமாணப் பத்திரத்திற்காக தில்லி உயர்நீதிமன்றத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்.

6. மீனாட்சி லேகி : வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயி களை “குண்டர்கள்” என்று முத்திரை குத்தி சர்ச்சையை ஏற்படுத்தியவர். எதிர்க் கட்சி எம்.பி.க்களை அமலாக்கத்துறை வழக்குகள் மூலம் தண்டிப்போம் என நாடாளுமன்றத்திலேயே மிரட்டியவர்.

7. ரமேஷ் பிதுரி : தொடர் வகுப்புவாத வெறியாட்டப் பேர்வழி. கட்டுக்கடங்காத நடத்தையின் வரலாற்றைக் கொண்ட வெறுப்புணர்ச்சியாளர். எப்போதும் இழிபேச்சு பேசுபவர், நமது ஜனநாயகத்திற்கு அவமானம். மேற்குறிப்பிட்ட 7 எம்.பி.க்களால் தேசத்திற்கு அவமானம்" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: இஸ்லாமிய மாணவரை தாக்க கூறிய ஆசிரியை.. உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா? உ.பி அரசுக்கு நீதிமன்றம் கேள்வி !