Politics
செய்தியாளர் சந்திப்பை நடத்தாத மோடி.. வியட்நாம் சென்று விமர்சித்த அமெரிக்க அதிபர்.. முழு விவரம் என்ன ?
கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்துப்பேசினார். பின்னர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.அந்த சமயத்தில் பத்திரிகையாளர்கள் மோடியிடம் இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அப்போது வால் ஸ்ட்ரீட் ஜர்னலைச் சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சபரினா சித்திக் என்ற பத்திரிகையாளர், இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்புக்கு உள்ளாவதாக பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பினார்.
இதனை கேட்டதும் முதலில் ஆடிப்போன பிரதமர் மோடி, திக்கி திணறி ஒரு பதிலை தயார் செய்து ஜனநாயகம் தங்களது டி.என்.ஏ-வில் உள்ளதாகவும், அனைவரும் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பதாகவும் பதிலளித்தார். அதோடு அந்த சந்திப்பு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஆன்லைன் வழியாக ஒன்றிய அரசின் சில அதிகாரிகள் மற்றும் இந்தியர்கள் வாயிலாக பத்திரிகையாளர் சபரினா சித்திக்கிற்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், ஜி-20 மாநாடு டெல்லியில் நடைபெற்று முடிந்த நிலையில், மாநாடு நடைபெறும் முன்னர் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சந்தித்துப்பேசினர். வழக்கமாக இருநாட்டு தலைவர்கள் பேசும்போது அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பை அமெரிக்க அதிபர் மற்றும் அவரோடு இருக்கும் பிற நாட்டு தலைவர் ஆகியோர் நடத்துவது வழக்கம்.
அதன்படி இந்த சந்திப்பின்போதும் இது குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்த அமெரிக்க அரசு சார்பில் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த செய்தியாளர் சந்திப்புக்கு இந்திய அரசு அனுமதி மறுத்துள்ள தகவல் வெளிவந்தது.
இதுகுறித்துப் பேசிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், " இந்தியாவில் அமெரிக்க ஊடகங்களுக்குச் சரியான பத்திரிகை அணுகலை உறுதி செய்ய வெள்ளை மாளிகை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்" என்று கூறி பத்திரிகையாளர் சந்திப்புக்கு வலியுறுத்தியும் அது நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், மனித உரிமைகளைப் பேணுவதின் முக்கியத்துவம் குறித்தும், ஊடகங்களின் சுதந்திரம் ஒரு நாட்டை எப்படி வளமாக்கும் என்பது குறித்து மோடியிடம் எடுத்துரைத்தேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஜி-20 மாநாடு முடிந்ததும் வியட்நாம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்தியப் பிரதமர் அமெரிக்கா வந்தபோது இந்திய - அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தோம். தற்போது நான் இந்தியா சென்றபோது, மனித உரிமைகளைப் பேணுவதின் முக்கியத்துவம் குறித்தும், ஊடகங்களின் சுதந்திரம் ஒரு நாட்டை எப்படி வளமாக்கும் என்பது குறித்தும் எடுத்துரைத்தேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!