Politics
”பிரதமர் மோடியை தொந்தரவு செய்யும் ’இந்தியா’ என்ற பெயர்” .. ராகுல் காந்தி அதிரடி பேட்டி!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெல்ஜியத்திற்கு சென்றார்.
இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவரை அழைக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. 60% இந்திய மக்கள் தொகையின் தலைவராக உள்ள எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை குடியரசுத் தலைவர் வழங்கும் ஜி20 விருந்திற்கு அழைக்கப்படவில்லை.
காஷ்மீர் முன்னேற வேண்டும், அங்கு அமைதி நிலவ வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தவறான கொள்கைகளால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்துறையில் ஒருசில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா நாம் யார் என்பதைக் குறிக்கிறது. நாட்டின் பெயரை மாற்ற நினைக்கும் அளவுக்குப் பிரதமர் மோடியை இந்தியா என்ற பெயர் தொந்தரவு செய்துள்ளது.
ஒவ்வொரு முறையும் நாம் அதானி முறைகேடுகள் குறித்து பிரச்சனை எழுப்பும் போது பிரதமர் அதைத் திசை திருப்ப புதிய தந்திரங்களை வெளிப்படுத்தி வருகிறார். அதானி முறைகேடு குறித்த செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகே இந்தியா பெயர் மாற்றம் போன்ற திசை திருப்பல் நடைபெறுகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“வெல்வோம் உடன்பிறப்புகளே... 2026 தேர்தல் களம் நம்மை அழைக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!