Politics
சனாதன எதிர்ப்பு : #indiastandwithudaystalin - அமைச்சர் உதயநிதிக்கு இந்திய அளவில் பெருகும் ஆதரவு..
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நேற்றைய முன்தினம் (செப்.2) நடைபெற்றது. இந்த மாநாட்டில் சனாதன ஒழிப்பில் ஒத்த கருத்துகளையுடைய அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னணி எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்
அப்போது இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்தும், அது மக்களை எவ்வளவு அடிமையாக்குகிறது என்பது குறித்து பேசினார். மேலும் 'சனாதனம் என்பது டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது. எனவே அதனை எதிர்க்க கூடாது; ஒழிக்கணும்' என்றும் பேசினார். அதுமட்டுமின்றி சனாதனம் என்ற பெயரில் இன்னமும் மக்களை அடிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சு பாஜக, ஆர்.எஸ்.எஸ். இந்துத்வ கும்பலுக்கு பெரும் கடுப்பை கிளப்பவே, உதயநிதி பேசியதை திரித்து அவர் இனப்படுகொலை பற்றி பேசியதாக போய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பாஜகவின் உண்மை முகத்தை தோலுரிக்கும் விதமாக பாஜக கும்பலுக்கு இந்திய அளவில் இருந்து எதிர்ப்பும், உதயநிதிக்கு ஆதரவும் குவிந்து வருகிறது.
தமிழ்நாடு தலைவர்கள் உதயநிதி பேசியதை திரித்து செய்தி வெளியிட்டு வரும் பாஜக கும்பலுக்கு கண்டங்களும், பதிலடியும் கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்வு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதியும், தான் பேசியது தவறில்லை என்று பாஜக கும்பலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இருப்பினும் இந்திய அளவில் இருந்து பாஜக இந்துத்வ கும்பல் உதயநிதிக்கு எதிராக போய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக தற்போது இந்திய அளவில் #indiastandwithudaystalin என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதுகுறித்து பழங்குடியின செயல்பாட்டாளரும் Tribal Army அமைப்பின் நிறுவனருமான Hansraj Meena தனது X வலைதள பக்கத்தில், “சாதி மத பிற்போக்குத்தனங்களையும், மூட நம்பிக்கைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் காலில் போட்டு மிதித்த பெரியாரின் வாரிசு உதயநிதி ஸ்டாலின்” என்று குறிப்பிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!