Politics

குக்கி மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்.. காக்க வேண்டிய அரசே வெளியேற்றிய சோகம்.. மணிப்பூரில் பரபரப்பு !

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நடந்து சில மாதத்துக்கு பின்னர் வெளிச்சத்துக்கு வந்து இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், தற்போது வரை அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. மேலும், வன்முறை காரணமாக மெய்தி - குக்கி சமூக மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர் அந்த வகையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வசித்துவந்த சுமார் 300 குக்கி பழங்குடியின குடும்பங்களில் பலர் அங்கிருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், மீதம் இருப்பவர்களை தொடர்ந்து அங்கேயே தங்கவைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாமல், அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் மாநில அரசே ஈடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இம்பாலில் வசித்துவந்த குக்கி பழங்குடியின குடும்பங்களில் பலர் வெளியேறிய நிலையில், சுமார் 10 குடும்பங்கள் அங்கு தொடர்ந்து வசித்து வந்தனர்.

அவர்களை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கையை மாநில அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 10 பழங்குடியின குடும்பங்களைச் சோந்த 24 பேர் நேற்று முன்தினம் குக்கிகள் பெரும்பான்மையாக வாழும் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், தங்கள் உடமைகளை கூட எடுக்கவிடாமல் அரசு தங்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக பாதிக்கப்பட்ட குக்கி பழங்குடி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: 10 ஆண்டாக கள்ளத்தனமாக மது விற்ற பெண்.. அவரின் நிலை அறிந்து உதவிய காவல்துறை.. குவியும் பாராட்டு !