Politics
சாவர்க்கருக்காக கட்டி முடிக்கப்படாத புதிய நாடாளுமன்றம் அவசரமாக திறக்கப்பட்டதா ?- CPM எம்.பி கேள்வி !
இந்தியாவில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது உள்ள நாடாளுமன்றம் பழமையாக உள்ளது என கூறி புதிய நாடாளுமன்றத்திற்கு 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதே புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
குறிப்பாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நேரம் எண்பதால் மக்கள் பணத்தை புதிய நாடாளுமன்றம் கட்டி வீணடிக்க வேண்டாம் என அனைத்து எதிர்கட்சிகளும் வலியுறுத்தின. ஆனால் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி ஒன்றிய அரசு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28ம் தேதி திறந்து வைத்தார்.
அதற்கு முன்னரே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை இந்தியாவின் முதல் குடிமகனாக குடியரசுத்தலைவரை கொண்டு திறக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் குடியரசுத்தலைவருக்கு அழைப்பே விடுக்கப்படாமல் மோடியால் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது.
அதிலும் புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்னும் முழுமையாக கட்டிமுடிக்கப்படாமல் சாவர்க்கர் பிறந்த நாளான மே 28ம் தேதி திறக்கவேண்டும் என அவசர அவசரமாக திறக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தன. அதுமட்டுமின்றி புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டு இரு மாதங்கள் ஆகியும் தற்போது வரை பழைய கட்டடத்தில்தான் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பணிகள் முழுமையாக முடியாததே காரணமாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சாவர்க்கர் பிறந்த நாளில் திறக்க வேண்டும் என்பதற்காக அவசரமாக ஜனநாயகத்தை அவமதித்து புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டதாக சிபிஎம் எம்.பி சிவதாசன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. அவரின் கடிதத்தில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் பழைய கட்டடத்திலேயே நாடாளுமன்றம் இயங்கி வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிவடையாத நிலையில் புதிய நாடாளுமன்றம் அவசர அவசரமாக திறக்கப்பட்டது மக்களை ஏமாற்றும் செயல். சாவர்க்கர் பிறந்த நாளில் திறக்க வேண்டும் என்பதற்காக இத்தனை அவசரமா.? ஜனநாயகத்தை அவமதித்து திறக்கப்பட்டுள்ளதை நாம் அம்பலப்படுத்த வேண்டும்"" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!