Politics
“ராகுலுக்கு எப்போ கல்யாணம்..” சட்டென்று கேட்ட பெண் விவசாயி.. சோனியா காந்தியின் ரியாக்ஷன் என்ன ?
ஹரியானா மாநிலம் சோனிபாத் பகுதிக்கு மக்களை சந்திக்கு ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்றார். அப்போது அங்கே இருக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள பெண் விவசாயிகளுடன் பேசி, ஒன்றாக உணவருந்தி விவசாயமும் செய்தார். இதையடுத்து டெல்லியில் இருக்கும் தனது இல்லத்துக்கு உணவருந்த ஒரு நாள் வருமாறு அந்த பெண் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்துக்கு பெண் விவசாயிகள் விருந்துக்கு சென்றனர். அங்கே சென்ற அவர்கள் மகிழ்ச்சியாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் கலந்துரையாடினர். தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், பெண் ஒருவர் "ராகுலுக்கு எப்போ திருமணம்?" என்று கேட்டார்.
தொடர்ந்து அங்கிருந்த சிலரும் "சீக்கிரம் ராகுலுக்கு திருமணம் செய்து வையுங்கள்" என்று கேட்டனர். இதற்கு சிரித்துக்கொண்டே சோனியா காந்தி, "நீங்களே ஒரு பெண்ணை பாருங்கள்.. உடனே திருமணம் செய்துவிடலாம்" சிரித்துக்கொண்டே கூறினார்.
இதனை கேட்ட ராகுல் காந்தி, "இதுவும் நல்ல யோசனைதான். நீங்களே பெண் பாருங்கள்" என்று கலகலப்பாக பதிலளித்தார். தொடர்ந்து அவர்கள் அனைவரும் உணவருந்தி ஆடி பாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "சில விசேஷமான விருந்தினர்களுடன் எனக்கும், அம்மாவுக்கும், பிரியாங்காவுக்கும் ஒரு மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.
சோனிபாத்தைச் சேர்ந்த விவசாய சகோதரிகளுடன் மதிய உணவு சாப்பிட்டதுடன் நிறைய பேசினோம். பசு நெய், இனிப்பு, வீடுகளில் செய்யப்பட்ட ஊறுகாய் போன்றவற்றைக் கொண்டு வந்திருந்தார்கள்" என்று குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !