Politics
3-வது குழந்தை இருப்பதை மறைத்த மேயர்.. பதவி நீக்கம் செய்த பீகார் மாநில தேர்தல் ஆணையம்.. பின்னணி என்ன ?
பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது சப்ரா (Chhapra) என்ற நகரம். இங்கு கடந்த ஆண்டு மேயருக்கான தேர்தல் போட்டி நடைபெற்றது. இதில் ராக்கி குப்தா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சூழலில் தற்போது அவர் தனக்கு 3-வது குழந்தை இருப்பதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது.
அதாவது பீகார் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்ட்டியிடுபவர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்று ஒரு விதி உள்ளது. ஆனால் ராக்கி குப்தா தனது விவரங்களை பீகார் மாநில தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்போது, தன்னுடய 3-வது குழந்தை குறித்த விவரங்களை தெரியப்படுத்தவில்லை.
எனவே இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரிக்கையில், ராக்கி குப்தா மற்றும் அவரது கணவர் வருண் பிரகாஷ் ஆகியோருக்கு மூன்றாவது குழந்தை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து விசாரிக்கையில் ராக்கி - வருண் தம்பதிக்கு பிறந்த 3-வது குழந்தை, வருணின் உறவினர்களுக்கு தத்து கொடுத்து விட்டதாகவும், அதனாலே அந்த குழந்தை குறித்த தகவல்களை வெளியில் கூறவில்லை என்றும், ராக்கி குப்தா தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த 6 வயது குழந்தையின் ஆதார் அடையாளங்களில் ராக்கி குப்தா மற்றும் வருண் பிரகாஷ் ஆகியோரின் பெயர்கள் பெற்றோர்களாக இருக்கிறது. இதனால் அவருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக கருதி பீகார் மாநில தேர்தல் ஆணையம் (SEC) ராக்கி குப்தாவை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம் செய்துள்ளது.
இந்த நிகழ்வு குறித்து ராக்கி குப்தா கூறுகையில், "எனது கணவரின் உறவினர்கள், தங்களது 3-வது குழந்தையை தத்தெடுத்து விட்டனர். எனவே எங்களுக்கு இப்போது 2 பிள்ளைகள் தான். அதனால் தான் அதனை குறிப்பிடவில்லை. இது மக்கள் என்னை தேர்ந்தெடுத்து வெற்றி பெற வைத்துள்ளனர். எனவே தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறேன்." என்றார்.
தனக்கு மூன்றாவது குழந்தை இருப்பதை மறைத்து மேயர் பதவியில் வகித்து வந்தவரை பீகார் மாநில தேர்தல் ஆணையம் பதவி நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!
-
முதலீடுகள் விவகாரம் : திமுக மீது பொய் பழி.. அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆந்திர அமைச்சர் கொடுத்த பதிலடி என்ன?
-
நடிகர் ரவி மோகன் வீட்டில் வைரச் சங்கிலி திருட்டு : காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்!
-
“மேகதாது அணை விவகாரம்.. ஏற்கப்பட்ட எதிர்க்கட்சி திருத்தம்.. தமிழ்நாடு ஒற்றுமையை காட்ட வேண்டும்”- முரசொலி!