Politics
”அப்போதும், இப்போதும் டெல்லி சொல்வதையே கேட்கிறது அதிமுக” -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு !
திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் இரண்டு நாட்கள் இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக சேலம் தாதகாப்பட்டி மைதானத்தில் பொது கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலம் தாதகாப்பட்டி மைதானத்தில் இரண்டு நாட்கள் இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்று திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், "இது போன்ற கூட்டங்களில் தான் திராவிடம் குறித்த தகவல்களை இளைஞர்களுக்கு எடுத்துரைக்க முடியும் . திராவிட கொள்கையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் வகையில், திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டமானது தற்போது கழக தலைவரின் அனுமதி பெற்று ஒன்றிய வாரியாக திராவிட மாடல் பாசறை பயிற்சி கூட்டங்கள் நடத்திட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்தின் மூலம் பாசிச சக்திகளுக்கு பயப்பட மாட்டோம் என்பதனை நினைவு படுத்தி கொண்டே இருக்க வேண்டும்.நாடு போற்றும் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர். பெரியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர்
இந்தியாவில் வேறு எந்த இயக்கத்தினருக்கும் திமுகவினருக்கு போன்று பயிற்சி அளிக்கவில்லை. பெயர்களுக்கு பிறகு வரும் ஜாதியை ஒழித்த இயக்கம் திராவிடர் கழகம். தமிழ்நாடு உரிமைகளை ஒன்றிய அரசின் காலில் வைத்தது தான் அதிமுக அரசின் துரோகம். அப்போதும், இப்போதும் டெல்லி சொல்வதையே கேட்கிறது அதிமுக. அவசரநிலையின் போதுதான் அஇஅதிமுக என மாற்றப்பட்டது. அப்போதும் திமுக திமுகவாகவே இருந்தது.
தற்போது தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் . தமிழ்நாடு என்ற பெயர் சிலருக்கு கண்களை உறுத்தி வருகிறது. மாநில உரிமைகளுக்கு எப்போதும் குரல் கொடுப்பது திமுக தான் , சமூக நீதியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழந்து வருகிறது.சமூக நீதி குறித்த வரலாற்றை இளம் தலைமுறைக்கு சொல்ல வேண்டும். இணையதள காலத்தில் இருக்கும் நாம், இது போன்ற வரலாற்றை எடுத்து செல்ல வேண்டும். திராவிட இயக்கங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திராவிட மாடல் அரசை வழிநடத்த வேண்டும்" எனக் கூறினார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!