Politics
68 கோடி இழப்பு; 50 கோடி முறைகேடு.. அதிமுக ஆட்சியின் குளறுபடிகளை பட்டியலிட்ட CAG: கூண்டோடு சிக்கிய அதிமுக!
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான ஊழல்களும், முறைகேடுகள் நடைபெற்றதாக அப்போதைய எதிர்கட்சியான தி.மு.க தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. மேலும், ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க-வின் முறைகேடுகள் வெளிகொண்டுவந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தி.மு.க அறிவித்திருந்தது.
அதன்படி, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சிக்கு வந்த தி.மு.க., கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு ஆட்சியின் செயல்திறன் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG) of India) அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் அ.தி.மு.க-வின் பல்வேறு முறைகேடுகள் வெளியாகியுள்ளது.
அதில், ஒன்றிய அரசு விதிகளுக்கு முரணாக, டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதும், ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பித்ததும், நெடுஞ்சாலைத்துறையின் கம்பியூட்டரில் இருந்தே சிலர் டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சில குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டியில்லாமல் லாபத்தை பங்கிட்டுக்கொள்ள வர்த்தக குழு அமைத்து அவர்களுக்கு உள்ளேயே டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும், இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது,
மேலும், அ.தி.மு.க ஆட்சி செய்த கடந்த 2016-2021 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 14.76% சதவீதமும், மேல்நிலைப் பள்ளிகளில் 11.84% சதவீதமும் குறைந்துள்ளதாகவும், தரம் உயர்த்தப்பட்ட 528 பள்ளிகளில், 515 பள்ளிகள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவில்லை என்பதும் வெளிவந்துள்ளது.
அதோடு, நிர்வாகத் திறன் குறைவால் தமிழ்நாட்டில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் அடுத்த 10 ஆண்டுகளில் கூட இந்த இடைவெளியை குறைக்க முடியாது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர இலவச மடிக்கணினி, காலணி மற்றும் பள்ளி புத்தகப் பை வழங்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும், விலையில்லா நோட்டு புத்தகங்கள் தாமதமாக விநியோகிக்கப்பட்டதால் அரசு நிதி வீணானதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2016 - 2021 காலக்கட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.50.28 கோடி முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும், இது மேலும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியாகி அ.தி.மு.க ஆட்சியில் நடந்த நிர்வாக திறனை அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய அ.தி.மு.க முக்கிய புள்ளிகள் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!