Politics
“இது எங்க கொண்டு போய் நிறுத்தபோதோ?” - ரோட்டு கடையில் டீ போட்டு கொடுத்த மேற்கு வங்க MP வீடியோ பதிவு !
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது மக்களவை உறுப்பினராக இருப்பவர் மஹுவா மொய்த்ரா.
தொகுதி மக்களை அவ்வப்போது சந்தித்து வரும் இவர், விரைவில் அங்கு உள்ளாட்சி தேர்தல் வருவதால் தனது தொகுதி மக்களை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலுக்காக திரிணாமுல் காங்கிரஸ் 60 நாள்களில் 10 கோடி மக்களை சந்திக்கும் புதிய பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில் இப்பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மஹுவா மொய்த்ரா கடந்த 3 நாட்களுக்கு முன்னரும் சந்தித்து வந்தார். அப்போது அங்கே சாலையோரத்தில் இருக்கும் டீ கடைக்கு சென்றார். பின்னர் அங்கே தானே டீ போடுவதாக கூறி, அடுப்பில் இருக்கும் கொதிக்கும் பாலில், டீ தூள், வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவையை போட்டு டீ போட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அவர், “என் கையால டீ போடுறேன்.. இது எங்க கொண்டு போய் நிறுத்தபோதோ?” என்று கேளிக்கையாக பதிவையும் போட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறும் கமெண்டுகளை பெற்று வருகிறது
முன்னதாக பிரதமர் மோடியும் ஆரம்பத்தில் ஒரு டீ வியாபாரியாக இருந்தவர். பின்னர் முதலமைச்சராக இருந்து தற்போது 2 முறை பிரதமர் ஆகியுள்ளார். எனவே அதனை மறைமுகமாக குறிப்பிட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி எப்போதும் தன்னை ஒரு சாய்வாலா (டீக்கடைக்காரர்) என்று சொல்வதுண்டு. எனவே 'நாட்டிற்கு ஒரு சாய்வாலா போதும். இன்னொரு சாய்வாலாவை இந்த நாடு தாங்குமா என்று தெரியாது' என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
Also Read
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!
-
வெறும் வாய்ச்சவடால்தான்... 50 நாட்கள் ஆட்சியில் 5 ஆணவப் படுகொலைகள்... அச்சத்தில் மக்கள்!
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!