Politics

"எதிரிகள் எறிந்த ஆயுதத்தை ஒரே பதிலால் மொக்கை ஆயுதமாக்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்": சிலந்தி!

எம்.ஜி.ஆருக்குப்பின் அவரது மனைவி,பின்னர் அவரது கதாநாயகி கட்சியின் தலைமை ஏற்றால் அது வாரிசு அரசியல் ஆகாது; கருப்பையா மூப்பனாருக்குப் பின் அவரது மகன் வாசன் அந்தக் கட் சியை நடத்தினால் அது குடும்ப அரசியல் என்று கூறமாட்டார்கள்; ஜெயலலிதாவுக் குப் பிறகு அவர் 'உடன் பிறவா சகோதரி' தான் கட்சியின் ஆட்சியின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று 'கியூ' வில் நின்று கதறும்போது அங்கே வாரிசு அரசியல் தெரியாது; நேற்றுவரை போலீஸ் உத்தியோகம் பார்த்துவிட்டு இன்று கட்சிக்கு வந்த அண்ணா மலைக்கு தலைவர் பதவி தரும்போது அங்கே மூத்தவர்கள் பலர் இருக்க, இன்று வந்தவருக்கு பதவியா என்று கேட்க மாட் டார்கள்; எடியூரப்பா முதலமைச்சராக இருந்த கருநாடகாவில் அவரது ஒரு மகன் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர்; அதற்கு முன் சட்டமன்ற உறுப்பி னர். இன்னொரு மகன் விஜேயேந்திரா கருநாடக மாநில பா.ஜ.க.வின் துணைத் தலைவர் (Vice President) அங்கெல்லாம் குடும்ப அரசியலோ, வாரிசு அரசியலோ. கண்ணில் படாது, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியின் அக்காள் மகன் அ.தி.மு.க. வின் பொருளாளராக ஆக்கப்பட்டபோதும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட போதும், குடும்ப அரசியல் என்று காட்சியளிக்காது.

'அம்மா மறைந்து சமாதியின் ஈரம் காயும்முன் 'உடன்பிறவா சகோதரிக்கு உடை மற்றும் சிகை அலங்காரங்கள். புதிய ‘மேக்அப்'கள் செய்து 'சின்னம்மா வாக சித்தரித்து கட்சியின் பொதுச் செயலாளரும் ஆட்சியில் தலைவரும் இனி இவரே என்று 'ஜே'கோஷம் போட்ட போதெல்லாம் ‘குடும்ப அரசியல்', 'வாரிசு அரசியல்', 'மகுடம் சூட்டுதல்' “பட்டா பிஷேகம் - போன்ற சொற்கள் நினைவுக்கு வராது.

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக. சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த ராஜாஜியின் மகன் சி.ஆர். நரசிம்மன் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனால் வாரிசு அரசியலாக ‘அவாள்கள் கூக்கிரலிட மாட்டார்கள். அவரது பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மேற்குவங்க ஆளுநர் ஆகும்போது குடும்ப அரசியல் குறித்து சிலாகிக்கமாட்டார்கள், மற்றொரு பேரன் ராஜ்மோகன் காந்தி மாநிலங்க ளவை உறுப்பினரானால், 'வாரிசு அரசியல்' என்று வாய்திறக்கமாட்டார்கள்!

ஆனால் தி.மு.க.வில் மட்டும் தலை வர்கள், முன்னணியினர் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஈடு பட்டு பாங்குடன் பணியாற்றி, "இயக்கத் தின் ஏற்றத்துக்கு தங்களது கடும் உழைப்பை நல்கி, கட்சியின் தொண்டர் கள். நலம் விரும்பிகள் மற்றும் மக்களின் மதிப்பைப் பெற்று அதன் விளைவாக பொறுப்புகள் பெற்றிடும்போது மட்டும் அய்யய்யோ... வாரிசு அரசியல்.. குடும்ப அரசியல், நீண்டநாள் கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்க இப்போது வந்தவர்களுக்குப் பதவியா? என்றல்லாம் கூப்பாடுபோட்டு காந்தாரிதனத்தோடு அம்மியை எடுத்து அடிவயிற்றில் குத்திக்கொண்டு அலறுவதைக் காண்கி றோம். இவை இன்று புதிதாகப் புறப்பட்ட புலம்பல் அல்ல; கழகம் தோன்றி வளரத் தொடங்கிய காலத்திலிருந்து, அதனை அழித்துவிடநினைத்து எதிரிகள் எடுத்தெறிந்து முனை முறிக்கப்பட்ட ஆயுதம் தான் இது!

அந்த முனை முறிந்த ஆயுதத்தை அரசியல் எதிரிகள் எடுத்துள்ளனரே என்று அமைச்சர் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினிடம் குறிப்பிட்டு கேட்டபோது, என் செயல்மூலம் அதற்கான பதிலைக் காட்டுகிறேன் - என ஒரே வரி பதில் மூலம் அந்த முனைமுறிந்த ஆயுதத்தை மொக்கை ஆயுதமாக்கினார்!

அவரது பதிலில் எத்தனை வரலாற்று பதிவுகள் உள்ளடங்கியுள்ளன என்பதைப் பட்டியலிட்டால் அதன் ஆழம் விளங்கும்! எல்லாவற்றையும் விளக்கிட இடம்போதாது என்பதால் சிலவற்றை எடுத்து வைக்க விரும்புகிறோம்.

மறைந்த அரசியல் ஞானி முரசொலி மாறன் மத்திய அமைச்சராக பொறுப் பேற்றபோது இதே 'குடும்ப அரசியல்', 'வாரிசு அரசியல்' போன்ற ஆயுதங்களை அரசியல் எதிரிகளும், சில ஏடுகளும் சுமந்து வந்ததை பலரும் அறிவர். அவர் ஆற்றிய அருஞ்செயல்களால், தமிழகத்தின் தலைநகர் சென்னையைச் சுற்றிய புறநகர்களெல்லாம் பெரும் தொழில் நகராக மாறி காட்சியளிக்கின்றன!

‘சென்னை பெங்களூர் வழித் தடத்திலும் ‘சென்னை - தாம்பரம்' சாலைகள். சென்னை சுற்றுப்புறமான ஒரகடகம் போன்ற பகுதிகளில் குவிந்து கிடக்கும் மாபெரும் தொழிற்சாலைகளானாலும் சென்னை - மாமல்லபுரம் வழித்தடத்தில் உயர்ந்து நிற்கும் ஐ.டி. பூங்காக் களானாலும் அத்தனையும், முரசொலி மாறன் கொணர்ந்து தமிழகத்தில் குவித் தவை. அதுமட்டுமா தோஹாவில் 2001 ஆம் ஆண்டு நடந்த வர்த்தக மாநாட்டில், வளரும் நாடுகளால் அமெரிக்கா போன்ற நாடுகளை எதிர்த்து முக்கிய முடிவுகள் எடுக்க இயலும் என்று இந்தியாவின் வர்த்தக அமைச்சராக இருந்த முரசொலி மாறன் நிரூபித்து - உலக நாடுகளை எல்லாம் இந்தியாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்ததை உலக நாடுகளின் பார்வையில் ஒரு 'ஹீரோ' போல காட்சி அளித்தார் முரசொலி மாறன் என ஏடுகள் எல்லாம் பாராட்டின!

முரசொலி மாறன் அமைச்சர் ஆன போது, வாரிசு அரசியல் குடும்ப அரசியல் என்று பேசிய வாய்கள் எல்லாம் முரசொலி மாறன் ஆற்றிய செயல்களால் விக்கித்து நின்றன! இன்றைய தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணித் தலைவர் பொறுப்பை வழங்கியபோதும் பல திக்குகளிலிருந்து இந்த 'வாரிசு அரசி யல்' ‘குடும்ப அரசியல்' கூச்சல்கள் எழும் பின. இயக்கத்தின் வலுவான அணியாக மட்டுமின்றி, எதிர்காலத்திலும் கழகம் வலுப்பெற்று விளங்கிடுமளவு தனது பணி யைச் சுற்றிச் சுழன்று ஆற்றினார்! இந்த இயக்கத்தினை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பலமான கட்டு மானத்தை உருவாக்கினார்.

எழுச்சிமிகு இளைஞர்களை தமிழக மெங்குமிருந்து திரட்டி இயக்கத்திற்கு புது இரத்தம் பாய்ச்சினார். மாநாடுகளில் அந்த இளைஞர்களைக் கொண்டு அவர் முன்னின்று நடத்திய ஊர்வலம், கழக வர லாற்றில் தனி முத்திரை பதித்தது. அத் தனை அணி வகுப்புகளும் இராணுவ அணி வகுப்பு போல சிறிதும் கட்டுக் குலை யாது நடத்தப்பட்டவை.

தேசிய முன்னணி துவக்க விழாவில் வி.பி.சிங், என்.டி.ராமாராவ், தேவிலால். பொம்மை, பி.ஜூ பட்நாய்க், அஜித்சிங் முதலானோர் பங்கேற்க - அந்த விழா வில் ஆரம்பத்தில் தளபதி ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்திய ஊர்வலம் மூலம் அகில இந்தியத் தலைவர்களையே சிலிர்க்க வைத்தார்.

ஒரு பெரும் இளைஞர் பட்டாளத்தை உருவாக்கினார். அந்த இளைஞர்கள் ரசிகர்மன்றங்களின் ரசிகர்கள்போல இருந்துவிடக் கூடாது. கொள்கை. கோட்பாடு களை உணர்ந்திட வேண்டும் என்பதற்காக திராவிட இயக்க வரலாற்றை சீராகவும் சிறப்பாகவும் அறிந்திட திராவிட இயக்க வல்லுநர்களைக் கொண்டு பாசறைக் கூட்டங்களை மாவட்டங்கள் தோறும் பல்வேறு இடங்களில் நடத்தினார்.

இந்த இயக்கத்தை தொடர்ந்து முன் னெடுத்துச் செல்ல பல ஆர்வமிகு இளை ஞர்களை உருவாக்கி அந்த அடுத்தத் தலைமுறையினரை இயக்கத் தலைமைக்கு அறிமுகம் செய்து வைத்தார். இன்றைய அமைச்சரவையில் ஒளிஉமிழும் பலர் இளைஞர் அணியின் உருவாக்கமாக விளங்குவதே அதற்குச் சான்று!

இளைஞர் அணித்தலைவர் பொறுப் பினை தளபதி ஸ்டாலினுக்குத் தந்த போது, வாரிசு அரசியல் என வாய் புளித் ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிய வாய்களை தனது செயல்வேகம் காட்டி அடக்கினார்!

பின்னர் தளபதி ஸ்டாலின் சென்னை நகர மேயராக போட்டியிட்டு மக்களின் பேராதரவோடு வென்ற நிலையில் மீண் டும் அந்த பழைய உடைந்த ஆயுதத்தை எடுத்து சுழற்றினர்; சென்னை போக்குவ ரத்து நெரிசல் போக்கிட பத்து மேம்பாலங் கள்; மழை நீர் வடிகால்கள் சீரமைப்பு. மாநகராட்சிப் பள்ளிகளை தனியார் பள்ளி கள் தரத்துக்கு தரம் உயர்த்தியது மட்டு மின்றி மாநகராட்சிப் பள்ளியில் சேர 'சிபாரிசு' தேவைப்படும் அளவு சிறந்த கல்விக் கூடங்களாக மாற்றியது. மாநக ராட்சி சார்பில் பூங்காக்கள். இல்லா சென்னையாக மாற்ற பெருமுயற் சிகள், மேயர் செல்லும் வாகனத்திலிருந்து அதிகாரிகளைத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் வசதி ஏற்படுத்தி மேயர் நகரில் காரில் செல்லும்போது எங்காவது கழிவு நீர்த் தேக்கம், குப்பை கள் கண்டால் அதனை சம்பந்தப்பட்ட அதி காரிக்கு தெரிவித்து உடனடி நடவடிக் கைக்கு ஏற்பாடு 'சிங்காரச் சென்னை'யாக மாற்ற திட்ட மிட்டு செயல்பட்ட வேகம் இதனால் அவர் மேயர் பொறுப்பேற்கும் போது வீசப்பட்ட விமர்சனங்களுக்கு செயலால் பதிலளித்தார்.

அவர் உள்ளாட்சி அமைச்சராக. துணை முதல்வராக ஆக்கப்பட்டபோதும். மீண்டும் அந்த பழைய விமர்சனங்கள் வாலை ஆட்ட நினைத்தன; கலைஞர் ஆட்சியில் துவக்கிய மகளிர் சுய உதவிக் குழு திறம்பட செயல்பட பல ஆக்கப் பூர்வ உதவிகளை உடனுக்குடன் செய்து மக ளிர் பாராட்டைக் குவித்தார். “உள்ளாட்சி யில் நல்லாட்சி" எனப் புகழத்தக்க அளவு. தான் வகித்த துறைக்கு வலுசேர்த்தார். இப்படி அவர் காட்டிய செயல்வேகம் புய லாய் மாறி புல்லர்கள் வைத்த

விமர்சனத்தை புறமுதுகிட்டு ஓடவைத்தது! வாலைநீட்டியவர்கள் வாலறுந்த நரி களாய் ஓடினர். இந்த பழைய வரலாறுகளை மனதில் கொண்டுதான், செய்தியாளர் கேட்ட கேள் விக்கு ‘செயலால் பதிலளிப்பேன்' என மன உறுதியுடன் அமைச்சர் உதயநிதி பதில் கூறியிருப்பார் என எண்ணுகிறோம்.

இளைஞர் அணிச் ஆற்றிவரும் பணிகள் மூலம் கழகக் குடும்பத்தின் வாரிசாக, சேப்பாக்கம் சட்ட மன்ற தொகுதி மக்களின் பேராதரவைப் பெற்று அந்தத் தொகுதியின் வாரிசாகி யுள்ள அமைச்சர் உதயநிதி, இனி அமைச் சராக ஆற்றும் பணி மூலம் தமிழ்மக்க ளின் இதயவாரிசாக ஒளிவிடுவார்; அதனையே அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பதிலில் இருந்த திண்ணம் காட்டுகிறது. அவர் தமிழ் மக்களின் இதய வாரி சாக ஒளிர்விட வாழ்த்துக்கள்!

Also Read: "35 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான உரிமை": நிறைவேற்றுவாரா ரணில்: முரசொலி!