Politics
ஒவ்வொன்றுக்கும் அனுமதி கேட்க வேண்டி இருக்கு: ஆளுநர்,ஒன்றிய அமைச்சர் முன் ஆதங்கப்பட்ட புதுச்சேரி முதல்வர்!
ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சுதேஷ் தர்ஷன் நிதியின் கீழ் புதுச்சேரியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளங்களின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஒன்றிய இணையமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, " நான் முதல்வராக பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டாகிறது. புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் நிர்வாக சிக்கல்களால் முடியவில்லை.
ஒவ்வொன்றுக்கும் ஒன்றிய அரசிடம் ஒப்புதல் வாங்க ஏற்படும் தாமதத்தால் பல திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில முடிவுகளை எடுக்கத் தடைகள் ஏற்பட்டு வருவதால் வளர்ச்சி, வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைத்ததில் இருந்தே பா.ஜ.கவினர் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அதேபோல், அரசின் திட்டங்களில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தலையீடு அதிகமாக இருப்பதால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகிறது என தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இந்நிலையில், முதல்வர் ரங்கசாமியே ஒன்றிய அரசிடம் ஒவ்வொரு திட்டத்திற்கும் அனுமதி கேட்க வேண்டி இருக்கிறது என பேசியுள்ளது, துணைநிலை ஆளுநரின் தலையீட்டை வெளிப்படையாகக் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
"மோடியின் அமைச்சரவையில் 39 % பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்" : அமித்ஷாவுக்கு ஆ.ராசா MP பதிலடி !
-
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்காக... இழப்பீடு தொகையை அதிகரித்த தமிழ்நாடு அரசு : முழு விவரம் உள்ளே !
-
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் - 818 பேருக்கு பணி நியமனம் : முழு விவரம் உள்ளே!
-
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!