Politics
கல்வியையும், சுகாதாரத்தையும் இரு கண்களாக பார்க்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் பொன்முடி பாராட்டு!
கோவை இராமநாதபுரத்தில் உள்ள ஜெம் மருத்துவமனையில் இலவச லேபராஸ்கோபி புற்றுநோய் அறுவை சிகிச்சை முகாம் மற்றும் பயிற்சி முகாமை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி துவக்கி வைத்தார். ஜெம் மருத்துவமனையும், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் இணைந்து ஒருநாள் இலவச லேபராஸ்கோபி புற்றுநோய் அறுவை சிகிச்சை முகாமை நடத்தியது.
இந்த முகாமை துவக்கி வைத்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், “கல்வியையும், சுகாதாரத்தையும் இரு கண்களால் பார்ப்பவர் தமிழக முதல்வர். அதுதான் திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி என்பது குறிப்பாக அடிதளத்தளத்தில் இருக்கின்ற எல்லா மக்களுக்கும், கல்வியாக இருந்தாலும் சரி, சுகாதாரமாக இருந்தாலும் சரி எல்லாமே கிடைக்க வேண்டும் என்பது தான்.
கலைஞர் ஆட்சியின்போது காப்பீட்டுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தான் இப்போது இதுபோன்ற இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றது. படித்தவர்கள் கூட இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுவதை காண முடிகின்றது. எனவே, சரியான விழிப்புணர்வை மருத்துவர்கள் ஏற்படுத்த வேண்டும்.
புற்றுநோயை குணப்படுத்த அதிநவீன சிகிச்சைகள் தற்போது வந்துவிட்டது. கல்வியாக இருந்தாலும், மருத்துவமாக இருந்தாலும், நாம் படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் மருத்துவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!