Politics
உலகில் பயன்படாத பொருட்கள் பட்டியலில் இவருக்கும் இடம் உண்டு:TRB ராஜா பகிர்ந்த படம் உங்கள் பார்வைக்கு ..!
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.
ஆளுநர்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்குக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் ஒன்றிய அரசு தொடர்ந்து ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு பல்வேறு குடைச்சல்களை கொடுத்துக்கொண்டு இருக்கின்றன.
ஆளுநர்களின் முக்கிய வேலையே மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ரப்பர் ஸ்டாம்ப் வேலைதான். ஆனால் சில ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கும் அதிகாரம் தங்களுக்கும் இருப்பதாக நினைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
ஆளுநர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனாலும் ஆளுநர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசின் கைப்பாவையாகவே செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும் எம்,எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா அவர்களின் ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் பதிவில் எதற்கும் பயன்படாத பொருள்களை வைத்து (இருந்தும் அதனால் ஒருபயனும் இல்லாத நிலை ) ஆளுநர் ஆர்.என்.ரவியும் அதுபோல தமிழ்நாட்டில் எதற்கும் பயன்படாமல் இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி போன்ற முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் செய்துவருகிறார். இது போன்ற காரணங்கள் உயிரிழப்பு போன்ற துயர சம்பவங்களும் நேரிட்டுள்ளது. இதன் காரணமாக ஆளுநரை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். அறிஞர் அண்ணா முன்னர் கூறியதை போல ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு? என்ற கூற்றை உண்மையாக்கும் வகையிலே ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?