Politics

ஆம் ஆத்மி பிரச்சாரத்தில் கல்வீசிய தாக்குதல் நடத்திய பாஜக.. சிறுவனின் காயத்தால் குஜராத்தில் பரபரப்பு!

குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க தொடர்ச்சியாக ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அங்கு ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது போல் குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் களம் கண்டுள்ளது. இதனால் அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்திற்குத் தொடர்ச்சியாகப் பயணம் செய்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல் குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க அரசின் அவலங்களை வெளிப்படுத்திப் பேசிவருகிறார். டெல்லி, பஞ்சாபில் ஆட்சியை பிடித்ததுபோல் குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இதனால் பா.ஜ.க தலைமையிடம் பீதியடைந்துள்ளது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் கதிர்காம் சட்டமன்றத் தொகுதியில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் குழுமியிருந்த பொதுமக்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் சிறுவன் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது பாஜக குண்டர்கள்தான் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் குஜராத் மாநில தலைவர் கோபால் இத்தாலியா கூறுகையில், "சட்டமன்ற தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில், பாஜக குண்டர்கள் கற்களை வீசி தாக்குதலை நடத்தினர். கற்களை வீசும் பாஜகவினருக்கு எதிராக துடைப்பத்தின் (ஆம்ஆத்மி சின்னம்) மூலம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பர்" என விமர்சித்துள்ளார்.

Also Read: பிரிட்டனின் படிக்க இந்திய மாணவர்களுக்கு கட்டுப்பாடு.. பிரதமரானதும் ஆட்டத்தை தொடங்கிய ரிஷி சுனக் !