Politics
“இந்தி திணிப்பை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்” : திண்டுக்கல் ஐ.லியோனி வலியுறுத்தல்!
சேலத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சாளர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்பில் உரையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் நான்காவது நாளான இன்று புத்தக திருவிழா வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் எழுத்தாளர் பவா செல்லத்துரை கலந்து கொண்டு, கதையின் உயிர் மனிதனே என்ற தலைப்பிலும், தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு கதை கேட்டு வளர்ந்தேன் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
அவர் பேசும் போது, “பழங்கால கதைகளும், உதாரணங்களும் அவரவர் மொழியில் இருந்தால் மட்டுமே நன்று என்றும் ஆனால் தற்போது மொழி திணிப்பு என்பது நம்மை எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனையாக உள்ளது. இந்தி மொழியை படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் இந்தியை திணிப்பை தான் எதிர்க்கிறோம். இந்தி திணிப்பை எதிர்க்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் சேலம் பால்பண்ணை பொது மேலாளர் விஜயபாபு, சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Also Read
-
செப்.19 அன்று தி.மு.க முப்பெரும் விழா நடைபெறும்! : தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்காரியா கமிஷன் வரலாறு; இதனை விஜய் அறியமாட்டார்! - முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!