Politics
"தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் என்னை அணுகினர்" -முதலமைச்சரின் மகள் பகிரங்க குற்றச்சாட்டு !
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சியில் இழுத்து வருகிறது. எதிர்கட்சிகளை மட்டுமின்றி கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களையும் தங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறது. இதன் மூலம் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்தும் இருக்கிறது.
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க முயல்வதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் நடைபெற்ற அதேபோன்ற முயற்சியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானாவின் ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 பேரை விலைக்கு வாங்க சிலர் பேரம் பேசியுள்ளனர்.
இது குறித்த பேச்சு வாரத்தையை ஒரு பண்ணை வீட்டில் வைத்து நடத்தியபோது ஒரு எம்.எல்.ஏ இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி பேச்சுவார்த்தை நடந்தபோது அங்கு வந்த போலிஸார் 3 பேர் கொண்ட அந்த கும்பலை கைதுசெய்தது. போலிஸார் விசாரணையில் 4 எம்.எல்.ஏ-க்களில் ஒருவருக்கு 100 கோடியும் மற்றவர்களுக்கு தலா 50 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பாஜகவினர் பேரம் பேசும் வீடியோ ஆதாரங்களை விடீயோவை தெலுங்கானா முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் வெளியிட்டார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜகவில் சேர்ந்துகொள்ளுமாறு பாஜகவை சேர்ந்தவர்கள் தன்னை அணுகினார்கள் என்றும், தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பாஜகவிலிருந்து தங்கள் கட்சியில் சேர்ந்துகொள்ளுமாறு எனக்கு `ஷிண்டே மாடல்' (மஹாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பு) முன்மொழிவு வந்தது. ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் சொந்த பலத்தில் தலைவர்களாக மாறுவோம், பின்கதவால் அல்ல. ஏனென்றால் என் தலைவர் சந்திரசேகர ராவ் இருக்கும் கட்சியில் என் இதயம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”