Politics
"இந்தியாவிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக இருக்கும் கர்நாடக பா.ஜ.க அரசு".. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் தொடங்கிய இவரது நடைபயணம் கேரளா மாநிலம் வழியாக சென்று தற்போது கர்நாடாக மாநிலத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று தனது 34வது நாள் நடைபயணத்தை சித்தரதுர்கா மாவட்டத்தில் தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. முன்னதாக நேற்று திரியூர் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியா உடைந்துவிடக்கூடாது. இந்தியா ஒற்றுமையுடனே இருக்கும் என்பதே பா.ஜ.கவுக்கு தனது நடைபயணம் மூலம் அளிக்கும் பதில் செய்தியாகும். மேலும் பா.ஜ.கவின் வன்முறைக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும் எதிரானதுதான் இந்த நடைபயணம்.
இந்தியாவிலேயே கர்நாடக மாநிலம் தான் ஊழிலில் ஊறிப்போன மாநிலமாக உள்ளது. சாதாரண பணி மாறுதலுக்குக் கூட 40% லஞ்சம் கேட்கப்படுகிறது. ரூ.2500 கோடிக்கு முதல்வர் பதவியும். ரூ.80 லட்சத்துக்கு போலிஸ் பணியும் காசுக்காக விற்கப்பட்டதாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரே கூறியுள்ளதாக" ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!