Politics
பிலாஸ்பூர் எய்ம்ஸ் திறப்பு.. ஆனால் இன்னும் பொட்டல்காடாக இருக்கும் மதுரை எய்ம்ஸ் -சு.வெங்கடேசன் கண்டனம் !
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் நாளை இமாச்சல பிரதேசம் செல்லும் மோடி அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
அக்டோபர் 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவமனை, பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. அது தற்போது 95% பணிகளை நிறைவடைந்து (உண்மையாகவே ) திறக்கப்படவுள்ளது.
ஆனால், பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வரை சுற்றுசுவரோடு நிற்கிறது. அதோடு சமீபத்தில் தமிழ்நாடு வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ்ஸில் 95% பணிகள் முடிவடைந்தது என்று கூறியது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியா ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக் 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்.அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது.
அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. திரு ஜெ பி நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் MLA வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை திரு. அண்ணாமலை அறிக" என்றும் கூறியுள்ளார்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!