Politics

“எவ்ளோ லஞ்சம் வாங்குனாருனு சொல்லவா? - இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” : பழனிச்சாமியை அலறவிட்ட அமைச்சர்!

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் மூர்த்தி சந்தித்தார். அப்போது அமைச்சர் மூர்த்தி பேசியதாவது, “எடப்பாடி பழனிச்சாமி 10 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது எத்தனை லட்சம் கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

மதுரை தமுக்கம், பெரியார் பேருந்து நிலையம் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும் போது மண் எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள். தற்பொழுது நடைபெறுவதுதான் சமூக நீதி திராவிட மாடல் ஆட்சி நாகரீகமான முறையில் அரசியல் செய்ய வேண்டும.

வேண்டுமென்றால் திருமண செலவு குறித்து ஆய்வு நடத்தி கொள்ளலாம் . அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் உள்ளபோது திருமணத்தை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்? எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவிக்காக எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார். முதல்வர் பதவி பெற என்ன செய்தார் என்பது எங்களுக்கு தெரியும். பத்திரப்பதிவு துறையில் கடந்த 16 மாதங்களில் 100 மடங்கு மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் பத்திரப்பதிவு, வணிகவரித்துறையில் ஆய்வு நடத்தியதுண்டா? அ.தி.மு.க ஆட்சியில் இரு துறைகளிலும் கவனம் செலுத்தவில்லை, வருவாய் ஈட்டவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பத்திரப்பதிவு வணிகவரித்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேரில் விவாதம் செய்ய தயார்.

எடப்பாடி பழனிச்சாமி அமைச்சராகும் முன்பு என்ன தொழில் செய்து கொண்டிருந்தார், பொதுச்செயலாளர் பதவியை பெற எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தார் அதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது என்பது எங்களுக்கு தெரியும்.

முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதை விடுத்துவிட்டு, மிகப்பெரிய பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வாய்க்கு வந்தபடி பேச கூடாது. அவருடைய தகுதிக்கு ஏற்ப பொறுப்புடன் பேச வேண்டும்.

16 மாதங்களில் அனைத்து துறைகளிலும் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் வைத்து சென்ற 6 லட்சம் கோடி கடனை சமாளித்தி 20 மணி நேரம் உழைத்து கொண்டிருக்கும் முதல்வர் இந்தியாவின் முன்னோடியாக இருக்கிறார் அவரை பார்த்து குறை கூறுவதா?

முதல்வரை பேச யாருக்கும் தகுதி கிடையாது. தி.மு.க ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செய்துள்ளோம் என்பதை பட்டியலிட தயராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இதெல்லாம் எப்படி தெரியும்? - அவசர குடுக்கையாக அறிக்கை விட்ட பழனிச்சாமி” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!