Politics
”MLA-க்களை வாங்க பணம் இருக்கு.. ஆனா விவசாயிகளின் பூண்டு வாங்க பணமில்லையா ?” - பாஜகவை தாக்கிய காங்கிரஸ் !
ஒன்றிய பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து விவசாயிகளுக்கு எதிராக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. மேலும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட விவசாயிகளுக்கு அவர்கள் உரிமைகள் கிடைப்பதில்லை.
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது சிவராஜ் சிங் செளகான் தலைமையிலான பா.ஜ.க அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் விவசாயிகள் பயிரிட்ட பூண்டுகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் இருந்து வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் தங்கள் வேதனைகளை காணொளி காட்சி மூலம் இணையத்தில் வெளியிட்டு குமுறி வரகின்றனர். அவர்கள் வெளியிட்ட வீடியோ வாயிலாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்த விலை கிடைத்ததைத் தொடர்ந்து பூண்டுகள் நிறைந்த சாக்குகளை நீர்நிலைகளில் வீசும் காட்சியும் இணையத்தில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "எங்கள் பூண்டு விளைச்சலுக்கு 1 கிலோ வெறும் 1 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. எங்கள் உழைப்பு அனைத்தும் இப்படி போவதை கண்டால் எங்கள் மனம் மிகுந்த வேதனையில் இருக்கிறது" என்று மனமுடைந்து கூறினார்.
இந்த நிலையில் மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு விவசாயிகள் மீது அக்கறையற்று செயல்படுவதாக அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் நேற்று தொடங்கிய அம்மாநிலத்தின் 5 நாள் மழைக்கால கூட்டத்தொடரின் போது, சட்டப்பேரவையின் முன்னால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் விவசாயிகளின் பூண்டுகளை கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு பா.ஜ.க சில மாநிலங்களில் இருக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களை வாங்க பணம் இருக்கிறது.
ஆனால் விவசாயிகள் பயிரிட்ட பூண்டை வாங்க மட்டும் பணமில்லை என்றும், பா.ஜ.க அரசு விவசாயிகள் மீது அக்கறையின்றி செய்லபடுவதாகவும் விமர்சித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!