Politics

குஜராத்திற்கு ரூ.608 கோடி.. UPக்கு ரூ.503கோடி, தமிழ்நாட்டிற்கு ரூ.33 கோடி : வஞ்சிக்கும் ஒன்றிய அரசு !

ஒன்றிய பா.ஜ.க அரசு விளையாட்டு மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதியை அள்ளிக் கொடுத்துள்ளது தொடர்பாக பெரும் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றிய அரசு விளையாட்டை விரிவுப்படுத்தவும், மற்றும் ஊக்கப்படுத்தவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஒன்றிய அரசு, Khelo India எனப்படும் விளையாட்டு திட்டத்தின் கீழ் அதிகபட்சமா குஜராத் மாநிலத்திற்கு ரூ.608 கோடியும், உத்தரபிரதேசத்துக்கு ரூ.503 கோடியும், அருணாச்சல பிரதேசத்துக்கு ரூ.183 கோடி, கர்நாடகாவிற்கு ரூ.128 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.112 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டிற்கு வெறும் 33 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மற்றொரு கொடுமை என்னவெனில், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது ஆந்திரா, அசாம், பீகார், டெல்லி, அரியானா, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட மிக்ககுறைவு ஆகும்.

அதுமட்டுமல்லாது, அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களின் எண்ணிக்கையும் பொறுத்தவரை டெல்லியில் 121 பேரும், அசாமில் 56 பேரும் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 18 பயிற்சியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாடு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: "விலைவாசியை கட்டுப்படுத்த தகுதியில்லாத ஒன்றிய பா.ஜ.க அரசு": தி.மு.க MP டி.ஆர்.பாலு கடும் தாக்கு!