Politics
தேர்தல் முடிவுகள் எதிரொலி.. 5 மாநில தலைவர்கள் பதவி விலக உத்தரவு- காங்கிரஸில் இன்னும் அதிரடி காத்திருக்கு!
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.க-வும் வெற்றிபெற்றன.
காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட வெற்றிபெறவில்லை. சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் நடைபெற்று முடிந்த 5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கட்சியில் மறு சீரமைப்பு செய்வதற்காக 5 மாநில காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்ய சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி உத்தரவையடுத்து உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கணேஷ் கோடியல். தொடர்ந்து மற்ற மாநிலங்களின் காங். தலைவர்களும் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதை கருத்தில்கொண்டு காங்கிரஸில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக காங். வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!