Politics
நீடிக்கும் கொடநாடு மர்மம்: தோண்ட தோண்ட அவிழும் முடிச்சுகள்; கொலை கொள்ளைக்கு மூளையாக இருந்த இருவர் கைது!
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் மூலையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி தனிப்படை போலிசார் கைது செய்தனர்.
அவரது நண்பர் சேலம் ஆத்துரை சேர்ந்த ரமேஷ் என்பவரும் கைது கைது செய்யபட்ட நிலையில் இருவரையும் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டனர்.
அவர்கள் இருவரையும் 08-11-21 வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி சஞ்ஜை பாபா உத்தரவிட்டார். அதனையடுத்து இருவரும் கூடலூர் கிளை சிறைக்கு அழைத்து செல்லபட்டனர்.
கொநாடு கொள்ளை சம்பவம் நடைபெறும் முன்பே தனபால் மற்றும் ரமேசுக்கு தகவல் தெரிந்தும் காவல் துறையினரின் விசாரணையின் போது மறைத்து உள்ளனர்.
இதனால் தான் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!