Politics
ஆளுநரை எடுபிடியாக வைத்து ஆட்சி செய்வது பெருமையா? - ஒன்றிய அரசை கடுமையாக சாடிய CPIM பாலகிருஷ்ணன்!
ஒன்றிய அரசின் எடுபிடியாக ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்சி செய்வது என்பது பொருத்தமற்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.
பாரதியாரின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாரதியார் மணி மண்டபத்திற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் ஒரு கையால் போன்றுதான் இருக்கிறார். இதனால்தான் ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா என கேள்வி எழுகிறது. சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கிற திட்டங்களைதான் நிறைவேற்ற வேண்டுமே தவிர ஆளுநர் என்ற ஒன்றிய அரசின் எடுபிடியை வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை ஆட்டிப்படைத்து ஆட்சி செய்வது என்பது பொருத்தமற்றது என்பதுதான் எங்களுடைய அடிப்படையான கருத்து.” என கடுமையாக சாடியுள்ளார்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!