Politics
“நிர்பயா நிதி எங்கே? - பெண்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன?”: கேள்விகளால் துளைத்தெடுத்த தயாநிதிமாறன்!
மக்களவையில் எழுத்துப்பூர்வமானன் பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நிர்பயா நிதியில் இருந்து ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒதுக்கப்பட்ட நிதிகளின் விவரங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கான டெண்டர் செயல் முறையில் முறைகேடுகள் குறித்த விவரங்கள் பற்றி இரயில்வேதுறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
தேசிய அளவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய துவக்கப்பட்ட நிர்பயா நிதியில் இருந்து ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒதுக்கப்பட்ட நிதிகளின் விவரங்கள் மற்றும் பயன்பாடு விவரங்கள்; ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதா?
தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு வசதிகளை செயல்படுத்துவதற்கு பரிசீலனையில் உள்ள ரயில் நிலையங்களின் விவரங்கள்;
நிர்பயா நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகை மூலம் ரயில் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் திட்டத்திற்கான டெண்டர் செயல் முறையில் முறைகேடுகள் ஏதேனும் நடந்ததா? இது தொடர்பாக சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் அல்லது வேறு எந்த அமைப்பும் விசாரணையை தொடங்கியிருக்கிறதா மற்றும் அது பற்றிய விவரங்கள் தெரிவிக்கவும்?
நிர்பயா நிதியின் கீழ் பரிசீலிக்கப்படும் புதிய திட்டங்கள் மற்றும் அதன் விவரங்கள் தெரியப் படுத்தவும்” எனக் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?