Politics
"தி.மு.க கூட்டணி, வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியைப் பெறும்” - வேல்முருகன் உறுதி!
தி.மு.க கூட்டணிக்கு தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
தி.மு.க கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி தொகுதியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டிடுகிறார்.
பண்ருட்டியில், வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் களம் காண இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் பேசுகையில், “பண்ருட்டி தொகுதியில் பொதுமக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, என்னாலான பணிகளைத் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்வேன். ஏற்கெனவே பண்ருட்டி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாக இருந்து மக்களுக்காகப் பாடுபட்டுள்ளேன்.
அ.தி.மு.க கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. தி.மு.க தலைமையிலான கூட்டணி பலம் பெற்றுக் கொண்டிருக்கிறது. தே.மு.தி.க மாநிலம் முழுவதும் தொகுதிகள்தோறும் 5 அல்லது 6 ஆயிரம் வாக்குகளைப் பெறும்.
அந்த ஓட்டுகள் அனைத்தும் உடைகின்றபோது தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இதுவரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத வெற்றியாக இது அமையும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!