Politics
"வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக பாடுபட்டவரை நாய் எனத் திட்டுவதா?” - ராமதாஸை விளாசும் வேல்முருகன்!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கிடைக்க சி.என்.ராமமூர்த்தி தான் காரணம் என்றும், ராமதாஸ் பொய்யான தகவலைக் கூறி வருவதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய வேல்முருகன், “வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தையை, தகாத வார்த்தைகளால் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடைக்க ராமதாஸ் தான் காரணம் என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
2010ல் வன்னியர்களுக்கு 15% உள்ஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடர்ந்தவர் சி.என்.ராமமூர்த்தி தான். அவர் மீது அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டிக்கிறது. பொய்யான பிரச்சாரத்தை ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். சாதிவாரியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் முறையாக இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுப்பார். தேர்தலில் தி.மு.கவிற்கு ஆதரவாக வன்னியர் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி, “ராமதாஸ், அன்புமணிக்கு இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு பங்கும் கிடையாது. ராமதாஸ் மிரட்டும் வேலையை செய்து வருகிறார். மிரட்டித்தான் கட்சியில் அனைவரையும் இணைத்துள்ளார். என்னை மிரட்டும் பாணியில் ராமதாஸ் அவர்கள் பேசுகிறார். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கிடைக்க ராமதாஸ் தான் காரணம் என்று கூறுவது முற்றிலும் பொய்.
ராமதாஸின் இந்த பொய்யான அரசியல் வியூகத்தை நாங்கள் நிச்சயம் வென்றெடுப்போம். இட ஒதுக்கீடுக்கு வன்னியர் கூட்டமைப்பு தான் காரணம். நாங்கள் பெற்ற பிள்ளைக்கு அவர்கள் இனிஷியல் போட்டுக்கொள்வது எவ்விதத்திலும் சரியல்ல. பா.ம.க தானாகவே இந்த தேர்தலில் வீழும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!