Politics
குடித்த டீ-க்கு காசு கேட்ட கடைக்காரருக்கு கொலை மிரட்டல் : சென்னையில் தே.மு.தி.க நிர்வாகி கைது!
சென்னை என்ஸ்சி போஸ் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் அக்பர் பாஷா. இவரது கடைக்கு நேற்று தே.மு.தி.க வட்ட செயலாளர் ஆன்ட்ரூஸ் மற்றும் இவரது மூன்று நண்பர்கள் வந்து டீ மற்றும் வடை சாப்பிட்டுள்ளனர். பின்னர் சப்பிட்ட பொருட்களுக்கு காசு தராமல் சென்றுள்ளனர்.
இதனையடுத்து கடைகாரர் ஆன்ட்ரூஸிடம் பணத்தை கேட்டதற்கு நான் யார் என்று தெரியுமா? என்னிடமே பணம் கேட்கிறாயா? என்று தகாத வார்த்தையால் திட்டியும், கடையில் இருந்த பிஸ்கட் பாட்டிலை எடுத்து கடை முன்பு பிளாட்பாரத்தில் போட்டு உடைத்தும் மற்ற பொருட்களை கீழே தள்ளிவிட்டும் மிரட்டியிருக்கிறார்.
இதனால் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் டீக்கடைகாரர் அக்பர் பாஷா, புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை செய்து தே.மு.தி.க வட்ட செயலாளர் ஆன்ட்ரூஸ் மீது ஆபாசமாக திட்டுதல், பொருட்களை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் இவர் மீது ஏற்கெனவே வடக்கு கடற்கரை காவல் நிலையம் மற்றும் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக பதியப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆன்ட்ரூஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!