Politics

“பந்தாவுக்காக நிவாரண நிகழ்ச்சியை விழாவாக மாற்றிய அ.தி.மு.க அமைச்சர்” : தனிமனித இடைவெளி காணாமல் போன அவலம்!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்தும், தடியடி நடத்தியும் வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சாமானியர்கள் மீது தாக்குதல் நடத்தும் போலிஸார் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக செயல்படும் அ.தி.மு.க மக்களுக்கு எந்த வித உதவிகளை செய்யாமலும் தனக்கென்ன என்பதுபோல திரிகிறது.

மேலும் உதவிகள் செய்தாலும் ஊர் கூட்டி விளம்பரம் செய்து ஊரடங்கு விதிகளை கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரணம் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர் பட்டியலில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கூட்டம் அதிகமாக இருக்கவேண்டும் என அப்பகுதி மக்களை ஒரு குறுகிய தெருவில் ஒன்றுக்கூட்டினர்கள். நிவாரணம் வழங்க வந்த மக்களை முறையாக தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து நிற்கும் படி அறிவுறுத்தாதால் மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக முந்தியடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

அதுமட்டுமின்றி, நிகழ்ச்சி காலை 10 மணியளவில் நடப்பதாக கூறப்பட்டதால் பொதுமக்கள் 9 மணிக்கே குவியத் தொடங்கினர். சொன்ன நேரத்தில் நிவாரண பொருட்கள் வழங்கியிருந்தால் மக்கள் கூட்டம் ஓளரவு குறைந்திருக்கும் என்பதால் ஒரு மணிநேரம் தாமதமாக வந்து நிவாரண பொருளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினர்.

அ.தி.மு.கவினரின் இந்த விளம்பர மோகத்தைக் கேள்வி கேட்க முடியாமலும், மக்களை ஒழுங்கு படித்த முடியாமலும் அங்கிருந்த போலிஸார் திணறினர்கள். மேலும் தங்களது சுய விளம்பரத்திற்காக சமூக இடைவெளியை பின்பற்றாமல் நிவாரணம் வழங்கிய அ.தி.மு.க மற்றும் அமைச்சரால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.