Politics
"நாங்கள் கல்லெடுத்தும் எறிவோம்” - வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய அ.தி.மு.க அமைச்சர்!
“அ.தி.மு.க-காரர்கள் கல்லெடுத்தும் எறிவோம்” என வன்முறையை ஊக்குவிக்கும் விதமாகப் பேசியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த சுந்தரபாண்டியம் பகுதியில் மறைந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வன்முறையை ஊக்குவிக்கும் விதமாகப் பேசியுள்ளார்.
ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, “அ.தி.மு.க.,வினர் காந்தி கையைப் பிடித்து வந்தவர்கள் அல்ல. எம்.ஜி.ஆர்., கையைப் பிடித்து வந்தவர்கள். அதனால் வீரத்தோடு தான் இருப்போம்.
அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் கிடையாது; அ.தி.முக.காரர்கள். அ.தி.மு.க காரன் விசில் அடிப்பான், சவுண்டு விடுவான், தேவைப்பட்டால் கல்லெடுத்தும் எறிவான்.” எனப் பேசினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியோர் மீது தாக்குதல் நடத்தி டெல்லியையே வன்முறைக் களமாக்கி இருக்கிறார்கள் பா.ஜ.கவின் ஆதரவில் செயல்படும் இந்துத்வா சக்திகள்.
அதுபோல, தமிழகத்திலும் மதக் கலவரங்களை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க தலைவர்கள் கருத்துக் கூறி வருகிறார்கள். தமிழகத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நடைபெற்று வரும் அமைதிப் போராட்டங்களை கலவரமாக்குவதே அவர்களது எண்ணம்.
பா.ஜ.க-வின் கைப்பாவையாகச் செயல்படும் அ.தி.மு.க-வினர் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக வாக்களித்து, பெரும் போராட்டங்களுக்கும், வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தற்போது கலவரத்தைத் தூண்டும் விதமாகவும் பேசி வருவது மக்களைக் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.
Also Read
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!